சென்னை கேளம்பாக்கத்தில் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ், உயிரிழந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகும் ‘விடுதலை’ படப்பிடிப்பின் போது ரோப் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டு சண்டை பயிற்சி நடத்தி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். தமிழக சினிமாவில் பல பிரமாண்ட படங்களை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது நகைச்சுவை நடிகரான சூரியை முன்னிலைப்படுத்தி விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்..
தமிழகத்தின் பல இடங்களில் எடுக்கப்பட்ட இந்த காட்சியானது தற்போது சென்னை புறநகர் பகுதியான வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டைக்காட்சியில் பயிற்சியாளராக ஈடுபட்ட சுரேஷ் என்பவர் ரோப் கயிறு அறுந்து விழுந்து காயமடைந்தார். பின்னர் உடனடியாக படக்குழுவினர் செட்டிநாடு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்துள்ளார்.