Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோசியல் மீடியாவில் வரும் விளம்பரங்கள்… நம்பி யாரும் ஏமாறாதீங்க… ஆட்சியர் தகவல்…!!!

சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம்.

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பணிகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்றால் தமிழக அரசை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வேலை செய்யப் போகும் நிறுவனத்தின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு வேலை செய்ய இளைஞர்களை அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |