Categories
சினிமா தமிழ் சினிமா

சோசியல் மீடியாவில் ஷாலினி…. இது உண்மையா? குழம்பிய ரசிகர்கள்…. உறுதிப்படுத்திய தங்கை….!?!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது நடிகர் அஜித்துடன் காதலில் விழுந்தார். கடந்த 2000-ம் ஆண்டு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில்  ஷாலினி shaliniajithkumar2022 என்ற பெயரில் புதிதாக இன்ஸ்டா அக்கவுண்ட் ஓபன் செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், இது உண்மையா? என்ற குழப்பத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஷாலினியின் தங்கை ஷாம்லி அதை உறுதி செய்யும் வகையில், அவரை பின்பற்றுவதுடன், இன்ஸ்டாவிற்கு வரவேற்றுள்ளார். மேலும், ஷாலினி தற்போது அஜித்துடன் இருக்கும் புதிய போட்டோவை பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |