பல்வேறு பிரச்சனைகளை கடந்து கடலூர் மாவட்டத்தின் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் 45-வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் சுயேட்சை-3, அதிமுக-6, காங்கிரஸ், பாஜக மற்றும் பாமக-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-3, விடுதலை சிறுத்தைகள் கட்சி-3, திமுக-27 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தி.மு.க வின் சார்பில் சுந்தரி என்பவர் மேயர் பதவியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து தி.மு.க வை சேர்ந்த கீதா என்பவரும் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து கீதாவின் கணவர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தேர்தலின் போது 28 கவுன்சிலர்கள் திடீரென மாயமாகி உள்ளதால் கட்சியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக 32 பேர் மட்டுமே மேயர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்துள்ளனர். இதில் கடலூர் தொகுதியின் மேயராக தி.மு.க வை சேர்ந்த சுந்தரி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.