Categories
சினிமா தமிழ் சினிமா

சோதனைக்கு மேல சோதனை…. எப்படி தாங்குறது….? ஐஸ்வர்யா தனுஷ்க்கு வந்த சோதனைய பாத்தீங்களா….!!!

ஐஸ்வர்யா தனுஷ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் ஒரு திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகி மற்றும் நடனக்கலைஞரும் ஆவார். இவர் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியும் ஆவார். தனது கணவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார்.

இவர் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இவரது கணவர் தனுஷுடன் விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது கொரோனா தொற்றின் மூன்றாவது அலை  கடுமையாக பாதித்து வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களுக்கும் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டும் வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷுக்கும் கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் தனுஷின் ரசிகர்கள் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்தும் மற்றும் சிலர் தனுஷின் நலன் குறித்தும் விசாரித்து வருகிறார்கள்.

Categories

Tech |