Categories
சினிமா தமிழ் சினிமா

“சோதனையிலும் சாதனை!”…. தனுஷுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?…. என்னன்னு பாருங்க….!!!!

பிரபல நடிகரான தனுஷ் தற்போது தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், ஹிந்தியில் மேலும் இரண்டு படங்கள் தெலுங்கில் வாத்தி என பல படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் “மாறன்” திரைப்படம் OTT-யில் வெளியாகி திரைக்கு வர உள்ளது. அதனை முன்னிட்டு “பொல்லாத உலகம்” என்ற பாடல் இந்த படத்தில் இருந்து வெளியானது.

இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த பாடலில் இசையும், தனுஷின் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பாடல் யூடியூபில் வெளியாகி 24 மணி நேரத்தில் 7.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. அதாவது கொலவெறி பாடல் தொடங்கி ரவுடி பேபி வரை இதுவரை பல பாடல்கள் யூடியூபில் சாதனை படைத்திருக்கிறது.

அந்த வகையில் “மாரி 2” படத்தில் ரவுடி பேபி பாடல் ஒரே நாளில் 7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. தற்போது வெளியாகியுள்ள “பொல்லாத உலகம்” பாடல் யூடியூபில் 7.8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ரவுடிபேபி பாடலின் சாதனையை முறியடித்துள்ளது. எந்த பாடலினாலும் கடந்த மூன்று வருடமாக ரவுடிபேபி பாடல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பொல்லாத உலகம் பாடல் அந்த சாதனையை முறியடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Categories

Tech |