ஜெர்மனியில் கோழி இறைச்சியில் நோய்க்கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்ட தொடர்ந்து அதனை கவனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள ஆறு மாகாணங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கோழி இறைச்சியை வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த பரிசோதனையில் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய் கிருமி இருப்பது தெரியவந்துள்ளது இந்நிலையில் ராபர்ட் கோக் நிறுவனம் கோழி இறைச்சியில் இருக்கும் சால்மோனெல்லா கிருமி குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இறைச்சியை சமைக்கும் போது இருக்கும் வெப்பத்தால் அது கொல்லப்படும் என்பது உண்மைதான் ஆனால் இறைச்சியை கையால் தொடும் போதும் பாத்திரங்களில் வைக்கும் போதும் இந்த கிருமி உட்கார்ந்து நோயை பரப்ப வாய்ப்புள்ளது. எனவே பச்சை கோழி இறைச்சியை தனியாக வைத்து சமைக்கும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இறைச்சியை தொட்ட கைகளையும் இறைச்சியை வைத்திருந்த பாத்திரத்தையும் சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.