காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக தொரப்பள்ளி வனத்துறையின் சோதனைசாவடியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டவர்கள். அப்போது நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தது. இதையடுத்து சோதனை சாவடியை தாண்டி சென்றது. இதனால் வன ஊழியர்கள் அங்கிருந்து அச்சத்துடன் ஓடினார்கள். தொடர்ந்து காட்டு யானை குனில், புத்தூர் வயல் உள்ளிட்ட இடங்களுக்குள் நுழைந்தது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் கூடலூர் மார்த்தோமா நகர் பகுதியில் காட்டு யானை முகாமிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சமடைந்ததை தொடர்ந்து யானை சாலை ஓரமாக நின்றதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறியுள்ளதாவது வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரமாக்கி இருந்தாலும் காட்டு யானை ஊருக்குள் வந்துவிடுகின்றது. இதனால் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.