Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோதனை செய்த போலீஸ்…. நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற நபர்…. சென்னையில் பரபரப்பு…!!

நடுரோட்டில் தீக்குளிக்க முயன்ற சமையல் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை பகுதியில் சமையல் தொழிலாளியான சபி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழ்பாக்கம் ஈ.வே.ரா பெரியார் நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சபியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து சபி குடிபோதையில் இருக்கிறாரா என்பதை அறிய சப்-இன்ஸ்பெக்டர் அவரை சாலையோரம் அழைத்து சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்து தப்பி ஓடிய சபி பெட்ரோல் நிலையத்திற்கு சென்று 100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியுள்ளார். அதன் பிறகு சபி அந்த பெட்ரோலை தனது தலையில் ஊற்றி நடுரோட்டில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை தடுத்த சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி சபியை டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டார். இதனையடுத்து தற்கொலை முயற்சி உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சபியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |