கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா இவர் மீது தற்போது பல குற்றச்சாட்டுகள். முன்வைக்கப்படுகின்றன. அதாவதுஅதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்புகளுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். அதர்வா அதிகளவு மது குடிப்பதாகவும் இதனால்தான் இவருக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் வருகிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதர்வாவை வைத்து முருகானந்தன் இயக்கிய குருதி ஆட்டம் படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர். காரணம் இப்படத்தின் இயக்குனர் ஏற்கனவே 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் 2 கோடிக்கு கொடுக்காமல் உள்ளார். அதனால் தற்போது அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள படத்தை வெளியிட தடை விதித்துள்ளனர்.மேலும் அதர்வா படபிடிப்பில் பணியாற்றுபவர்கள் செய்யும் தவறு கூட அதர்வா மீதுதான் வருகிறது.
இதனால் அதர்வா மனவருத்தத்தில் இருந்துள்ளார். அதர்வா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகமாக வருவதால் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்களும் அதர்வாவை வைத்து படங்கள் தயாரிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இப்படியே போனால் அதர்வாவின் சினிமா வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அவரது நெருங்கிய நண்பர்கள் அதர்வாவுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். சினிமாவில் அப்பாவிற்கு இருக்கும் பெயரை கெடுத்து விடக் கூடாது என சில முன்னணி நடிகர்களும் அறிவுரை கூறி வருகின்றனர்.