நடிகை சோனியா அகர்வால் தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த அதையடுத்து 2006ம் வருடம் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010 வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க தொடங்கினார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் சோனியா அடிக்கடி பேஷன் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் சோனியா அகர்வால் தற்போது ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு திருமணமா? என்று கேட்டு வருகிறார்கள். அதாவது சோனியா அகர்வால் தன்னுடைய கையில் மெஹந்தி வரைந்திருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டு வருகிறார்கள். அதற்கு பதில் அளித்த சோனியா அகர்வால் தன்னுடைய திருமண மெஹந்தி இவ்வளவு எளிமையாக இருக்காது என்று கூறியுள்ளார்.