Categories
அரசியல் மாநில செய்திகள்

சோனியா காந்தியை நம்பாதீங்க…. உடனே கண்டனம் தெரிவிங்க… உங்கள் காரை மடக்குவோம் ? ஸ்டாலினை எச்சரித்த பாஜக …!!

பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறையை கண்டித்து பேசிய கராத்தே தியாகராஜன், பிரதமருக்கு நடந்த விவகாரம் குறித்து தமிழகத்தில் இருக்கிற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை,  எல்லோரும் கேட்டார்கள் என்ன பண்ணுவது என்று ? போலீஸ் வந்து இரண்டு பிரிவாக இருக்கு,  உளவுத்துறை ஒரு குரூப்பாக இருக்கு, சட்டம் ஒழுங்கு ஒரு குரூப்பாக இருக்கு. உளவுத்துறை ஒத்துழைக்கிறார்கள்,

சட்டம் ஒழுங்கு இன்னும் பழைய மாதிரி நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட வேண்டும். சோனியா காந்தியை நம்பினார்கள் என்றால்  இங்கு இருக்கிற தமிழக அரசுக்கு எமர்ஜன்ஸி தான் வருது. மத்திய அரசு என்ன பவர் என்று தெரியும் உங்களுக்கு.

எங்களுக்கும் கான்வாய்களை  மடக்க தெரியும், எங்களுக்கு பஞ்சாப் போக முடியாது, இங்க இருக்க கூடிய காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் சேர்ந்துள்ள  முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய காரை மடக்க தெரியும். ஆனால் எங்க தலைவர் முறையாக போக சொல்கிறார்கள், எங்களுக்கு பெரிய விஷயம் கிடையாது.

தலைமைக்கு கட்டுப்பட்டோம் நாங்களெல்லாம். எங்களுக்கும் முதல்வர் கான்வாய்யை மடக்க தெரியும். எல்லா விதமான ஜிக், ஜாக் வேலையெல்லாம் தெரியும் என திமுகவிற்கு சொல்கிறேன். இப்போ எல்லாவற்றிக்கும் நாங்களும் தயாராகி விட்டோம் பிஜேபியும், தேர்தலுக்கு வந்து நான் சொல்றேன், கட்டாயமாக சென்னை மாநகராட்சியில்  பிஜேபி மிக பெரிய வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Categories

Tech |