நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் 137 வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137 வது ஆண்டுவிழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் கட்சி அலுவலத்தில் இன்று காலை கட்சி கொடி ஏற்ற வருகை புரிந்தார். அங்கு வெள்ளை நிற கதர் உடுப்பில் சட்டையில் கட்சிக்கொடி தாங்கி ஏராளமான தொண்டர்கள் அணிவகுத்தனர். அப்போது சரியாக கொடி ஏற்ற வில்லை.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கொடியை சரியாக பறக்க விட முயற்சித்தபோது கொடி பறக்காமல் அவரது கையில் வந்து விழுந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் தொண்டர்கள் கொடியை சரியாக பறக்க விட முயற்சி செய்தனர். அதன் பிறகு வழக்கம்போல் நிகழ்ச்சி தொடங்கியது. இதனால் தலைமை அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.