பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர் ஊர் மக்கள் .
தமிழ், ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட் . திரைப்படங்களில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஹீரோ . கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் . தற்போது இவரது இமேஜ் மக்கள் மத்தியில் மாறிவிட்டதால் படங்களிலும் சோனு சூட்க்கு வில்லன் கதாபாத்திரங்கள் கொடுப்பதை இயக்குனர்கள் தவிர்த்து வருகிறார்களாம் .
இந்நிலையில் சோனு சூட்டின் மனிதநேயத்தை பாராட்டி அவருக்கு கோயில் கட்டி வழிபட்டுள்ளனர் ஊர் மக்கள். தெலுங்கானா மாநிலத்தில் சித்திப்பெட் மாவட்டத்தில் துப்ப தண்டா கிராமத்தில் மாவட்ட அதிகாரிகளின் உதவியுடன் இந்த கோவிலை கட்டியுள்ளனர் . இன்று திறக்கப்பட்ட இந்த கோயிலில் அந்த கிராமத்தின் பெண்கள் சோனு சூட்டின் சிலை முன்பு நடனமாடி ,ஆரத்தி எடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் நடிகர் சோனு சூட்டின் மனித நேயத்துக்கு கிடைத்த பரிசுதான் இந்த கோயில் என்று கிராம மக்கள் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .-