Categories
சினிமா தமிழ் சினிமா

சோபாவில் ஸ்டைலான போஸில் நயன்தாரா கையை பிடித்த விக்கி … தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை நயன்தாராவின் கையை ஸ்டைலாக விக்னேஷ் சிவன் பிடித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் பிரபலமான ஜோடிகள் சூர்யா-ஜோதிகா ,அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வரும் தம்பதிகள்  . அந்த வரிசையில் தற்போது காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பின்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது ‌.

தலைவிய ஹேப்பியா பாத்துக்குறீங்க! விக்கியை பாராட்டிய ரசிகர்..

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சோபாவில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் கையை விக்னேஷ் சிவன் பிடித்திருக்கும் போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது இணையத்தில் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது ‌.

Categories

Tech |