Categories
மாநில செய்திகள்

சோப்பு,ஷாம்பூ உட்பட அன்றாட தேவைகளின் விலையை உயர்த்த உள்ள நிறுவனங்கள்…. சாமானிய மக்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி…..!!

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தால் அன்றாட தேவைகளான சோப்பு,ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமான அளவில் அதிகரிக்க உள்ளது.

கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில் தற்போது அன்றாடம் தேவைப்படும் பொருட்களான சோப்பு, ஷாம்பு மற்றும் பிஸ்கட் உள்ளிட்டவற்றின் விலை 4 சதவிகிதம் முதல் 33 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, பார்லே, உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விலைப்பட்டியலை அறிவித்துள்ளன.

அதன்படி ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் தயாரிக்கும் சோப்பு, ஷாம்பூ மற்றும் பெர்சனல் கேர் பொருட்களின் விலை 12 சதவிகிதம் அதிகரிக்கும் எனவும்,இதேபோல் ரின் சோப் தன்னுடைய விலையில் 5 சதவீதத்தை உயர்த்தி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டைகர் பிரிட்டானியா, உள்ளிட்ட பிஸ்கட்டுகளை தயாரிக்கும் நிறுவனம் தனது விலை பட்டியல் 7.5 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து ஐடிசி நிறுவனம் தங்களின் விலையில் 7% உயர்த்தி உள்ளதாகவும் சோப்பின் விலை 5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |