Categories
தேசிய செய்திகள்

சோப் கூட விட்டு வைக்கலையா…? பிரபல நிறுவனங்களின் அதிரடி முடிவு… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சோப் விலையை உயர்த்துவதற்கு ஹிந்துஸ்தான், யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த சில வாரங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியதால் நிலை மேலும் மோசமாகி உள்ளது. போர் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பிஸ்கட், காபி, உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. அந்த வரிசையில் சோப்  விலையும் உயர போகிறது என்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

நுகர்பொருள் துறையில் முன்னணியில் இருக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் குளியல் சோப்பு, துணி துவைப்பதற்கு சோப் போன்ற சோப்புகளின் விலை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சோப் பிராண்டுகளான லக்ஸ், சர்ஃப் எக்ஸல், ரின் ஆகிய சோப்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே டவ், லைஃப்பாய் ஆகிய சோப்களின் விலையை கடந்த பிப்ரவரி மாதம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.பேஸ் வாஷ் விலையும் சுமார் 9 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. விம் பார், சர்ஃப் எக்ஸல்  ஆகிய இரண்டு பிராண்டுகளின் கீழுள்ள சோப்புகளின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஹிந்துஸ்தான், யூனிலீவர் தனது காபி விலையை மார்ச் மாதத்தில் 7 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திற்கு முன்பாக நெஸ்லே, டாபர், கோத்ரேஜ் உள்ளிட்ட நுகர்பொருள் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. பணவீக்கம் மற்றும் போர்  இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Categories

Tech |