ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு அரசை தவிர்க்க முயற்சி செய்து வருகிறது. அதற்கு ஏதாவது உடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வபோது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தலைநகர் மொகாடிஷூவில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் மேலும் 300க்கும் அதிகமான படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
இதனை சோமாலியாவில் உள்ள புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது இன்று அதிகாலை அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக தலைநகர் மெகாடிஷூவில் 2017ல் நடைபெற்ற லாரி வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த சம்பவத்துக்கு பின் நடைபெறும் மிகக் கொடூரமான குண்டுவெடிப்பு சம்பவமாக இது அமைந்திருக்கிறது. மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இருக்கலாம் என அந்த நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.