Categories
உலகசெய்திகள்

சோமாலியாவில் ஹோட்டல் மீது குண்டு வெடிப்பு தாக்குதல்… 9 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்னும் பயங்கரவாத அமைப்பு ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றது. மேலும் பொதுமக்கள் ராணுவத்தை குறிவைத்து அல்சபாத் பயங்கரவாத அமைப்பு அவ்வபோது தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த சூழலில் அந்த நாட்டின் கிஸ்மையு நகரில் உள்ள ஓட்டலில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அதன் பின் ஓட்டல் உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர், 47 பேர் காயமடைந்து இருக்கின்றனர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சுட்டுக் கொண்டுள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

Categories

Tech |