Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சோம்புவின் நன்மைகள் பற்றி தெரிந்தால்.!அசந்து போவீர்கள்..!!

சோம்பை இப்படி பயன்படுத்தி அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பின் சிறிது சோம்பு தருவார்கள் இது எதற்கு என்றால் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்தை சரிசெய்யும். சோம்பு தானே என்று நினைப்போம் ஆனால் இதோட மருத்துவ குணங்களை பார்த்தால் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நாள் இதை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று பயன்படுத்த நினைக்க தோன்றும்.

அழகிய உடல் வடிவம்:

தாகமாய் இருக்கும்பொழுது சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த நீரை குடித்து வந்தால் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து அழகிய உடல் வடிவத்தை பெறலாம்.

சோம்பு தண்ணீர் தயாரிப்பது:

ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து உங்களுக்கு எப்பொழுது தாகம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் குடித்து வாருங்கள். நாள்பட்ட வறண்ட இருமல் இவைகளால் அவதிப்படுபவர்கள் இந்த சோம்பு நீரை அருந்தி வந்தால் விரைவிலேயே குணமாகிவிடும்.

குளிர் ஜொரம்:

அதிக குளிர் ஜொரம்  இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் ஜொரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்.

ஈரல் நோய்:

உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு  ஈரல் தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும் .

பசியின்மை:

சிலபேர் பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும். சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

உடல் எடை:

சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவும். இந்த காலகட்டத்தில் கண்ட கண்ட உணவுப் பொருட்கள், காற்று மாசுபாடு, காஸ்மெட்டிக் பொருட்களின் டாக்ஸின்கள் ஆனது பல வழிகளில் உடலுக்குள் நுழைகிறது. ஆனால் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.

கருத்தரிப்பு:

கருப்பை பாதிக்கப்பட்டால் கருத்தரிப்பு நடக்காது. இதனால் சிலர் குழந்தை பேறு இல்லாமல் கூட அவஸ்தைப் படுவார்கள். இந்த சோம்புவை இளம் வறுவலாக வறுத்து பொடித்து வேலை ஒன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

குடல் புண்:

சில ஒவ்வாத உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு குடல் சுவர் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

நிம்மதியான தூக்கம்:

சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும். நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமாக  உடல் எடையைப் பராமரிக்கலாம். அலுவலகம் செல்பவர்கள் கூட தண்ணீருக்கு பதிலாக சோம்பு நீரை எடுத்துச் செல்லலாம்.

Categories

Tech |