மீல்மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது என்று பலரும் தெரியாமல் உணவில் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இவை சாப்பிடுவதால் நன்மை, தீமை பற்றி அறிவோம்..!
மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது, இந்த உணவுப் பொருளை தயாரித்து விற்ற ஒரு கம்பெனியின் பிராண்ட் பெயர்தான் மீல்மேக்கர் என்று அழைத்து வருகிறோம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு கடுமையான நிலையில் இருக்கும் வெஜிட்டேரியன் புரதம் ஆகும்.
சோயா பீன்ஸில் இருந்து பல பொருட்கள் கிடைக்கிறது. சோயா பால், சோயா புரதம் , சோயா எண்ணெய் இப்படி பல பொருட்கள் உண்டு. குறிப்பாக சோயா எண்ணெய் தயாரிக்கும் பொழுது சோயாபீன்ஸ் செக்கில் போட்டு பிழிந்து எடுப்பார்கள். அதன்பிறகு சக்கை புண்ணாக்கும் கிடைக்கும்.
இப்படி கிடைக்கக்கூடிய பொருள்தான் இறைச்சித் துண்டுகள் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக சின்ன, சின்ன துண்டுகளாக கட் செய்து பாக்கெட்களில் அடைத்து மீல்மேக்கர் என்று சொல்லி விற்கிறார்கள். ஒருவர் சைவ உணவை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உடையவர் என்றால் அவர் இறைச்சியின் சுவையை அனுபவிக்க விரும்பினால், இந்த சோயா பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கரை சாப்பிடலாம்.
சோயாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மீல்மேக்கரை சாப்பிட ஒரு சரியான சாய்ஸ், இதில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது இறைச்சிக்கு சமமாக நாம் கருதலாம். இந்த மீல்மேக்கர் உணவுகள் இறைச்சி உணவுகளுடன் சிறந்த மாற்று உணவு.
யாரெல்லாம் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கிறார்களோ அல்லது இறைச்சி சாப்பிட பிடிக்கவில்லையோ அவர்கள் இந்த சோயா சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் இறைச்சியில் இருந்து பெறக்கூடிய சத்துக்களை பெறமுடியும்.
இன்னும் சொல்லப்போனால் 1980களில் கல்யாண விருந்துகளில் வெஜ் பிரியாணிகளில் தென்பட ஆரம்பித்தது. இதை பிடித்துப்போனதால் பலரும் கடைகளில் இதை தேடிப்பிடித்து வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள். பிரியாணி செய்யும் பொழுது பீன்ஸ், கேரட், பட்டாணி இது கூடவே மேலும் கண்டிப்பாக இருக்கும்.
புரதச் சத்து குறைவாக இருப்பவர்களுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கும். அவ்வப்போது சீராக இடைவெளிவிட்டு சமையலில் சேர்த்து வரலாம்.சோயா தானிய வகைகளில் தான் அதிகமான புரோட்டீன் இருக்கிறது. ஒரு கிராம் சோயாவில் 28.6 கிராம் புரோட்டின் இருக்கிறது. இந்த புரோட்டின் நம் உடலுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்கள் கொடுக்கிறது.
மாமிச புரோட்டின் இணையாக வரக்கூடிய ஒரே சைவ புரோட்டின் சோயா பீன்ஸ் தான். அப்படி இருந்தாலும் இதில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது. இவைகளில் கார்போஹைட்ரேட்டின் அளவு ரொம்ப, ரொம்ப கம்மிதான். இவற்றில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு இவற்றின் பாதுகாப்பு ரொம்பவே முக்கியமானது.
இவை ஒரு இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், மினரல்கள் அதிகமாகவே இருக்கும். இதனால் இவை சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். இதைத் தவிர இவற்றில் இருக்கக்கூடிய இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
எவ்வளவுதான் நன்மைகளும் அளவுக்கதிகமாக இருந்தாலும்.. இதை அதிகம் எடுத்துக் கொள்ளும் பொழுது நம்முடைய உடலில் பாதிப்பை உண்டாக்கும்..
சோயாபீன்ஸ் பருப்பு குடும்பத்தை சார்ந்தது. பருப்பு சார்ந்த உணவுப் பொருட்கள் ஆகும். அலர்ஜி ஒத்துக்காது என்று நினைப்பவர்கள் மீல்மேக்கர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தொடர்ந்து அதிகப்படியான சோயா சார்ந்த உணவுகளை எடுத்து வந்தால் அது உங்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும்.
அதேபோல உங்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பது, இந்தமாதிரி பிரச்சினைகளை உண்டாக்கும். தைராய்டு சுரப்பியும் சரியாக வேலை செய்ய விடாது. தேவையான அளவு எடுத்துகொண்டால் பிரச்சினை இல்லை.