சோயிப் மாலிக்குடன் விவாகரத்து செய்யப்போவதாக எழுந்துள்ள வதந்திக்கு மத்தியில் “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன” என்று சானியா மிர்சா பதிவிட்டுள்ளார்..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் என்பவரை இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர்களுக்கு 4 வயதில் இஷான் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் இந்த நட்சத்திர தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஊடகங்களில் சோயப் மாலிக் சானியாவை ஏமாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவர்கள் பிரிவதற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் சில காலங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த வதந்திக்கு மத்தியில் இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா இன்ஸ்டாகிராமில் ஒரு ரகசியக் கதையைப் பகிர்ந்துள்ளார். அதில், “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாஹ்வைக் காண” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக தனது இன்ஸ்டாகிராமில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட சானியா, “கடினமான நாட்களை கடந்து செல்லும் தருணங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே விரிசல் இருப்பது உண்மை என்றே கூறப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி இருவரும் கருத்து கூறாமல் மெளனம் காத்து வருகின்றனர்.