Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சோர்வாக இருந்த மாணவி…. விஷம் குடித்து பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பறையில் மிகவும் சோர்வாக இருந்த மாணவியிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது தனது தாய் திட்டியதால் விஷம் குடித்ததாக மாணவி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு மாணவிக்கு தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |