ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – 3
ஆப்பிள் – 2
ஆரஞ்சு பழம் – 2
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்ப
பிஸ்தா பருப்பு – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
புதினா – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மிளகு தூள் – தேவையான அளவு
ஆப்பிள் – 2
ஆரஞ்சு பழம் – 2
ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்ப
பிஸ்தா பருப்பு – 2 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
புதினா – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மிளகு தூள் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஆரஞ்சு பழத்தை எடுத்து, தோலை நீக்கி, வட்டவடிவமாக வெட்டி எடுத்து கொள்ளவும். பின்பு பிஸ்தா, கேரட், ஆப்பிள்களை எடுத்து, நீளவாக்கில் நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பிறகு இஞ்சி, புதினாவை எடுத்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் ஒரு பாத்திரத்தை எடுத்து, நறுக்கிய ஆப்பிள், கேரட், எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, இஞ்சி, உப்பு, ஆலிவ் ஆயில் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
அதன் பின்பு ஒரு தட்டை எடுத்து, வட்டமாக வெட்டிய ஆரஞ்சு துண்டுகளை அடுக்கி வைத்து, அதன் மேல் கலந்து வைத்த கலவையை வைக்கவும்.
பின்னர் அதன் மேல் நறுக்கிய பிஸ்தா பருப்பு, மிளகு தூள், புதினா இலைகளை தூவி பரிமாறினால் சுவையான ஆப்பிள், ஆரஞ்சு சாலட் ரெடி.