Categories
மாநில செய்திகள்

“சோறு முக்கியமில்ல” எங்க வீட்டை வந்து பாருங்க சார்…. முதல்வரை கப் சிப் ஆக்கிய சிங்கப்பெண்…!!!

சென்னையில் சனிக்கிழமை நள்ளிரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனையடுத்து ஞாயிறு முதல் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்ததால் ராட்சத இயந்திரங்கள் மூலமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று வேளையும் அவர்களுக்கு பல இடங்களிலும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமின்றி முடியும் வரை சென்னையில் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை முழுக்க ஆய்வு செய்து வரும் ஸ்டாலின் தன்னுடைய தொகுதியான கொளத்தூர் பகுதிக்கு சென்றிருந்த போது அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பெண் ஒருவர், “சாப்பாடு கொடுக்கிறீர்களோ இல்லையோ? எங்க இடத்தை வந்து பாருங்கள் சார். தண்ணி வந்துருச்சி.! அதுக்கு ஒரு வழி பண்ணுங்க சார்” என்று ஸ்டாலினை பார்த்து  கேட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பகிரும் எதிர்க்கட்சியினர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சாப்பாடு கொடுக்கும் முதல்வரே! அவர்களுக்கு முதலில் அடிப்படை வசதி செய்து கொடுங்கள் வாழ்வதற்கு வழி சொல்லுங்கள் என்று துணிச்சலோடு உரிமை குரல் கொடுத்த சிங்கபெண்ணுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |