Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோலாரின் பயன்பாடுகள்…. அரசு தோட்டக்கலை கல்லூரி…. தேனி மாவட்டம்….!!

தேனியில் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் சார்பாக விவசாய கண்காட்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு தோட்டக்கலை கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் கிராமத்தில் தங்கும் திட்டம் அடிப்படையில் கம்பத்திலிருக்கும் உழவர் சந்தையில் விவசாயத்திற்கான கண்காட்சி மற்றும் கலந்துரையாடலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் வைத்து காளான் உற்பத்தி, சோலார் பயன்பாடு மற்றும் கம்பத்தின் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்படும் காய், கனிகளுக்கு நீர் மேலாண்மை குறித்தும் விளக்கினர். இந்த நிகழ்ச்சியில் கம்பம் தோட்டக்கலைத் துறையின் இயக்குனரான பிரியதர்ஷினி அவர்கள் தலைமை தாங்கியுள்ளார்.

Categories

Tech |