Categories
மாநில செய்திகள்

சோலா பூரியில் உயிருடன் நெளிந்த புழுக்கள்… அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரி… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் சென்னை திருமங்கலத்தில் செயல்படக்கூடிய அண்ணா நகர் வி ஆர் மாலில் நேற்று இரவு உணவு உண்பதற்காக மூன்றாம் தளத்தில் செயல்பட்டு வரும் நம்ம வீடு வசந்த பவன் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மகனுக்கு ஆர்டர் செய்த சோலா பூரியை சாப்பிடும் போது அதில் அதிக துர்நாற்றத்துடனும் ஐந்திற்கும் மேற்பட்ட புழு மற்றும் பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அவர் ஹோட்டலின் நிர்வாகத்தை கேட்ட பொழுது சரியான பதில் அளிக்காததால் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தொலைபேசி மூலம் பூரியில் புழு இருந்த புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆய்வு செய்தபோது சோலா பூரிக்கு பிசைந்து வைத்திருந்த மாவில் அதிகப்படியான புழுக்கள் இருந்துள்ளதாகவும் மேலும் மாவு கெட்டுப் போனதில் புளித்த வாடை அடித்ததாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நம்ம வீடு வசந்தபவன் உணவகத்தில்  உள்ள சமையலறை முழுவதும் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவாக உணவகத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகும் அதிகாரி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

மேலும் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர்  வந்து செல்லக்கூடிய சென்னை அண்ணா நகர் வி ஆர் மாலில் உள்ள நம்ம வீட்டு வசந்த பவன் உணவகத்தில் அதுவும் சோலாப்பூரியில் புழு இருந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்படக்கூடிய உணவகங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

Categories

Tech |