Categories
சினிமா தமிழ் சினிமா

சோலோ ஹீரோயினாக கலக்கும் நயன்… முதல் முறை மூன்று வேடங்களில்… ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ்…!!

நடிகை நயன்தாரா தற்போது நடித்துவரும் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாரா கடந்த 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக விளங்கி லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் . இவர்  பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் டோரா ,அறம் ,கோலமாவு கோகிலா ,ஐரா ,கொலையுதிர் காலம் உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் திரைப்படத்திலும் சோலோ ஹீரோயினாக நடித்துள்ளாராம்  . மேலும்  முதன் முறையாக மூன்று வேடங்களில்  நடித்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பெரிய சஸ்பென்ஸாக இருக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |