பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் இருப்பதாவது, சோழர் பெருமையின் அஞ்சாத பாதுகாவலர்களை சந்திக்கவும் என குறிப்பிட்டு சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்திலும் பார்த்திபன் சின்ன பலுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Meet the fearless protectors of Chola pride! Presenting @realsarathkumar as Periya Pazhuvettarayar and @rparthiepan as Chinna Pazhuvettarayar!#PS1 #PonniyinSelvan #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial pic.twitter.com/FZzrlmHet6
— Lyca Productions (@LycaProductions) September 1, 2022