Categories
உலக செய்திகள்

“சோவியத் யூனியன் நாடுகள்” தானியங்கள் ஏற்றுமதி நிறுத்தி வைப்பு?…. ரஷ்யா திடீர் முடிவு…..!!!!!

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தி வைக்க ரஷ்யா முடிவு செய்திருக்கிறது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், உள்நாட்டில் உணவுப் பொருள்களின் விலை உயா்வு மற்றும் பற்றாக்குறையைத் தவிா்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் முடிவால் கஜகஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.

கோதுமை ஏற்றுமதியில் முன்னணி வகித்து வரும் ரஷ்யாவும் உக்ரைனும் போரில் ஈடுபட்டு இருப்பதால் பல்வேறு நாடுகளில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்துள்ள சூழலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Categories

Tech |