லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது கருத்து எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த பொழுது, “மோடி எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர் என்று பலரும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் ஒரு சில கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான்.
ஆனால் தனது விருப்பு வெறுப்புகளை அரசு ரீதியான முடிவுகள் எடுக்கும்போது ஒரு போதும் அதில் ஈடுபடுத்தியது இல்லை. தகுந்த ஆலோசனைகளை எவர் கூறினாலும் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார் மோடி அவர்கள். இருப்பினும் பிரதமர் என்பதால் இறுதி முடிவை அவர் மட்டுமே எடுக்க இயலும். பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவுமே இல்லை. மாறாக தேசத்துக்காக பாடுபடுவதையே தனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளதாக கூறியிருக்கிறார்” என்று கூறினார்