பஞ்சாபில் பிரதமர் மோடியின் கார் தடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,
இது எல்லாத்தையும் விட மிக வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், பாரதப்பிரதமருடைய காண்பாய் நிறுத்தப்பட்டிருந்த இடம், பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில்… இதைத்தான் காங்கிரஸின் முன்னாள் அமைச்சர் மணீஷ் திவாரி அவர்கள் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தாலும் கூட தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருந்தார்.
அது மட்டும் இல்லை நண்பர்களே காங்கிரஸின் முக்கியத் தலைவர்களுடன் பேச்சை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். உத்தரகாண்டில் முன்னாள் முதலமைச்சர் திருஹரிஷ் ராவத் அவர்கள், பாரத பிரதமர் பக்கத்தில் பாம் ஏதும் வெடிக்கவில்லையே என்ற கருத்தை பதிவு செய்திருக்கின்றார்கள்.
சத்தீஸ்கரின் முதலமைச்சர் அவர்கள் பாரத பிரதமர் மீது யாரும் கல்லெடுத்து அடிக்க வில்லையே என்று சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சி அகில இந்திய இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் அவர்கள் how is the josh என்கின்ற வார்த்தையை பதிவு செய்திருக்கிறார்கள். நானோ பட்டோல் என்கின்ற மிக மூத்த காங்கிரஸ் தலைவர் நடந்தது சரிதான் என்று நியாயம் படுத்தியுள்ளார்.
அதேபோல இன்றுவரை பஞ்சாபினுடைய முதலமைச்சர் சன்னி அவர்கள் தான் செய்தது சரிதான் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதனால் பத்திரிகை நண்பர்கள் மூலமாக தமிழக மக்களுக்கும் கூட இந்த செய்தியை முழுமையாக எடுத்துக் கொண்டு போய் செல்வது நம்முடைய கடமை.
ஏனென்றால் இந்தியாவின் இறையான்மை, இந்தியாவினுடைய பிரதமர், இந்தியாவினுடைய பார்டர் மாநிலம். ரொம்ப சென்சிட்டிவாக இருக்கக்கூடிய மாநிலத்தில் இது போன்ற ஒரு நிகழ்வுகள் நடந்திருக்கின்றது. அதை பாரதிய ஜனதா கட்சி தொடச்சியாக கண்டித்துக் கொண்டிருக்கின்றது. இப்போது புதிதாக வந்துள்ள கொரோனா கட்டுப்பாடு என்னெனென இருக்கின்றதோ அது
அனைத்தையும் கூட முழுமையாக நாங்கள் பின்பற்றி தமிழகம் முழுவதுமே எல்லா மாவட்டத்திலும் கூட எங்களது கண்டன போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சியைப் பற்றி தமிழகத்துக்கு சொல்ல வேண்டும் என்றுதான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என அண்ணாமலை தெரிவித்தார்.