Categories
தேசிய செய்திகள்

ச்சீ இவங்கல்லாம் மனுஷங்களா…. அம்மா, அம்மான்னு கதறுறது கேட்கல…. மாங்காய் பறித்த சிறுவர்களுக்கு நடந்த கொடுமை…!!

மாங்கா பறித்த குற்றத்திற்காக சிறுவர்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த 9 மற்றும் 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர் தங்களின் நாயை தேடி மாங்காய் தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு மாங்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்து அதனை சிறுவர்கள் பறித்துள்ளனர். இதனை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர்களான பனோத் யாகூப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரும் சிறுவர்களை விரட்டி பிடித்து கட்டி வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் மாட்டு சாணத்தை கட்டாயப்படுத்தி சிறுவர்களின் வாயில் திணித்து சாப்பிட செய்துள்ளனர்.

பின்னர் பிரம்பு ஒன்றை வைத்து சிறுவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் சிறுவர்கள் இருவரும் அம்மா… அம்மா என்று கதறுவதை மற்றொருவர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த உள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவர்களுக்கு கொடுமையை செய்த யாகூப் மற்றும் ராமுலு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். வலி தாங்க முடியாமல் சிறுவர்கள் இருவரும் கதறும் இந்த காணொளி வைரலாகி பலரது கண்டனங்களை குவித்து வருகிறது.

Categories

Tech |