Categories
உலக செய்திகள்

ச்சீ…. நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாசப்படம் பார்த்த எம் பி…. பிரபல நாட்டில் பரபரப்பு…. !!

நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்த எம்பி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தலைமையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. நீல் பாரிஷ் ஒரு விவசாயி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு முதல் எம்.பி.யாக  பதவியேற்றுள்ளார். இவர் நாடாளுமன்ற கீழவை கூட்டத்தின் போது தனது செல்போனில் 2 தடவை ஆபாச படம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழும்பியது. மேலும் இவர் தனது சக பெண் எம்.பி.க்கு அருகில் இருந்தபடி ஆபாச படம் பார்த்ததை அந்த பெண் எம்.பி. கட்சியிடம் தெரியப்படுத்தினார்.

இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் பிரச்சனையை கிளப்பியதோடு, ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில் நாடாளுமன்ற ஆணையரிடம் கூட்டத்தொடரின் போது ஆபாச படம் பார்த்ததை நீல் பாரிஷ் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து என்ன சொல்லி இருக்காரு இல்ல முடிந்த வரைக்கும் நான் தொடர்வேன் திடீர்னு நீல் பாரிஷை கட்சியில் இருந்து நீக்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சி தெரிவித்துள்ளது. தன் மீதான விசாரணை முடியும் வரை எம்.பி. பதவியில் தொடர்வேன் என நீல் பாரிஷ் கூறினார். ஆனால் திடீரென நேற்று முன்தினம் அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது “இறுதியில் எனது குடும்பம், தொகுதி மக்கள் அனைவரும் கோபமாக இருப்பதை காண முடிந்தது. இந்தப் பதவியில் நான் தொடரத் தகுதியற்றவன் என்பதையும் உணர்ந்தேன்.65 வயதான அவர் நாடாளுமன்றத்தில் வைத்து ஆபாச படம் பார்த்தது குறித்து கூறுகையில் ஒரு இணைய தளத்தில் டிராக்டர்கள் குறித்து தேடிக் கொண்டிருக்கும்போது திடீரென தடை செய்யப்பட்ட ஆபாச படத்தை பார்க்க நேர்ந்தது. அந்த வீடியோவை பார்க்க கூடாதுதான். ஆனால் அந்நேரத்தில் நான் சிந்திக்காமல் சற்று தடுமாறி சிறிது நேரம் அந்த வீடியோவை பார்த்துவிட்டேன். இது எனது குற்றம் தான் மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் 2-வது முறையாக அந்த வீடியோவை பார்த்தேன். அதை வேண்டுமென்றே செய்துவிட்டேன். அறையின் ஓரத்தில் வாக்களிக்கக் காத்திருந்தபோது மீண்டும் அந்த ஆபாச படத்தை பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர் அந்த நேரத்தில் உங்களுக்கு என்ன தோன்றியது? என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த நீல் பாரிஷ் , “அது ஒரு பைத்தியக்கார தருணம். அந்த தருணத்தில் என்னை நான் பித்து பிடித்தவனாய் உணர்ந்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் கூட எனக்கு இல்லை. நான் செய்ததை நியாயப்படுத்த போவதில்லை. நான் செய்தது முற்றிலுமாக தவறு. நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |