வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். விஜய் ரசிகர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டிருந்தனர். விஜய் குட்டி ஸ்டோரிக்காகவே காத்திருந்தனர். மேடையில் பல திரை பிரபலங்களும் பேசினார்கள். அந்தவகையில் ரஞ்சிதமே பாடலை மேடையில் பாட வந்தார் பாடகி மானசி.
அப்போது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனையடுத்து மானசி செய்வதறியாது திகைக்க, உடனடியாக எழுந்து வந்த விஜய் மேடையேறி அவருக்கு மைக் கொடுத்தார். விஜய்யின் இந்த செயலுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.