அருணாச்சலம் படத்தின் படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே மிக முக்கியமான நடிகர் ரஜினிகாந்த்.
மேலும் இவரது படமென்றால் ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடுவார்கள். அதேபோல் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் எப்படி கொண்டாடப்படுகிதோ அப்படி நடிகர் ரஜினிகாந்தின் படங்கள் வெளியாகும் போதும் திருவிழாக்களை போல ரசிகர்கள் கொண்டாடுவார்கள். எப்போதும் ரஜினி இயக்குனர்களிடம் கதை கேட்கும் போது தனது வீட்டில் தான் கதை கேட்பாராம். அந்த கதையின் விவரங்களையும் தன் வீட்டில் தான் எப்போதும் வைப்பாராம். இதை அவர் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகின்றாராம். இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி, கிரேசி மோகன் உள்பட அருணாச்சலம் படத்தின் கதையை விவாதிக்க ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் கிரேசி மோகனுக்கு எப்போதும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளதாம். ஆனால் ரஜினியின் வீட்டில் எப்படிப் வெற்றிலை பாக்கு போடுவது என்று தெரியாமல் இருந்தபோது இதில் என்ன இருக்கிறது. இதற்கு ஏன் சங்கோஜப் படுகிறீர்கள் என கேட்டாராம் ரஜினி. மேலும் கிரேசி மோகன் வெற்றிலை போடுவதற்கு ஏற்பாடு செய்து வெற்றிலையை துப்புவதற்கு அருகில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு துப்புங்கள் என்றாராம் நடிகர் ரஜினி. இந்த செயல் கிரேசி மோகன் உள்பட படக்குழுவினர் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதாம். அத்துடன் 1997-ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது குறிப்பிடத்தக்கது.