Categories
கிரிக்கெட் விளையாட்டு

ச்ச…. என்னப்பா இப்டி சொதப்பிட்ட!…. ரோஹித்தை வெறுப்புடன் பார்த்த வீரர்கள்…. போட்டியில் திடீர் பரபரப்பு….!!!!

நேற்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியில் முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மாவுடன், கே.எல்.ராகுல் ஓபனராக இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக ரிஷப் பந்த் வந்தார். எனவே இந்திய அணி அதிரடி துவக்கம் கொடுக்கும் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் ரோஹித் சர்மா 5 ( 8 ) ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். அதன் பிறகு விராட் கோலி, ரிஷப் பந்த் இருவரும் தலா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 64 ( 83 ), கே.எல்.ராகுல் 49 ( 48 ) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடித்தனர். அதன் பிறகு தீபக் ஹூடா 29 ( 25 ), வாஷிங்டன் சுந்தர் 24 ( 41 ) இருவரும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 237/9 ரன்களை சேர்த்தது.

அதன் பிறகு பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக இருந்ததால் நிச்சயம் மேற்கிந்திய அணி தடுமாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் பிரெண்ட் கிங் ( 18 ), பூரன் 9 ( 13 ), டேரன் பிராவோ 1 ( 3 ), ஹோல்டர் ( 2 ), சாய் ஹோப் ( 27 ) என வந்த வேகத்தில் அனைவரும் நடையை கட்டினர். இருப்பினும் சமர்த் ப்ரூக்ஸ் நான்காவது இடத்தில் களமிறங்கிய நிலையில் நிதானமாக விளையாடினார்.

அப்போது 30 பந்துகளில் வெறும் மூன்று ரன்களை மட்டுமே எடுத்த சமர்த் ப்ரூக்ஸ் அதன்பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்தார். அதேபோல் அகில் ஹோசைனும் அவருக்கு மறுமுனையில் துணையாக விளையாட துவங்கியதால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. எனவே எப்படியாவது ப்ரூக்ஸ் விக்கெட்டை இந்திய அணி கைப்பற்றி ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது சிராஜ் 27-வது ஓவரை வீச வந்தார். வேகப்பந்து வீச்சுகள் அனைத்தும் பவுண்ட்ஸ் ஆனது.

அதன்பிறகு சிராஜ் முதல் பந்தை வீச வந்தபோது சிலிப் திசையில் நின்று கொண்டிருந்த கேப்டன் ரோஹித் தேர்ட் மேன் திசைக்கு நகர்ந்தார். இந்த நிலையில் ப்ரூக்ஸ் அடித்த பந்து எட்ஜ் ஆகி பவுண்டரி நோக்கி சென்றது. இதனால் ரோஹித்தை சிராஜ் சோகத்துடன் பார்த்து விட்டு நகர்ந்தார். அதேபோல் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் ரோஹித்தை பார்த்து அதிருப்தியில் வாயில் கைவைத்து நின்றார். இந்த நிலையில் ரோஹித் தனது தவறை ஒப்புக் கொண்டு சிலிப் திசைக்கு சென்றுவிட்டார்.

Categories

Tech |