Categories
உலக செய்திகள்

“ச்ச..என்ன கொடூரம்!” ஆதரவற்றவருக்கு உணவளிக்க சென்ற நபருக்கு நேர்ந்த நிலை.. இளைஞரின் வெறிச்செயல்..!!

லண்டனில் ஆதரவற்ற நபருக்கு உணவு கொடுக்க சென்ற 4 குழந்தைகளின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் உள்ள எசெக்ஸ் பகுதியில் James Gibbons என்ற 34 வயது நபர் தன் 4 குழந்தைகள் மற்றும் தனக்கு மனைவியாக போகும் விக்டோரியா என்ற பெண் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தன் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளான கடந்த ஞாயிற்று கிழமை அன்று, தெரு ஓரத்தில் இருந்த ஆதரவில்லாத ஒரு நபருக்கு இரவு 9:30 மணிக்கு உணவு கொடுப்பதற்காக சென்றிருக்கிறார்.

ஆனால் அந்த சமயத்தில் நான்கு பேர் சேர்ந்து அந்த ஆதரவில்லாத நபரை துன்புறுத்தியுள்ளனர். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த ஜேம்ஸ் அவர்களை விரட்டியுள்ளார். அதில் ஒருவர் கத்தியால் James ஐ சரமாரியாக தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில், தன் வருங்கால மனைவி விக்டோரியாவின் வீட்டிற்கு சிறிது தொலைவிலேயே பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.

தற்போது இச்சம்பவம் தொடர்பில் 13 மற்றும் 16 வயதுடைய பெண்கள் உள்பட 4 பேர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் விசாரணைக்கு பின்பு இரண்டு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

Categories

Tech |