Categories
சினிமா

ச்ச என்ன மனுஷன்யா நீ…. சிவகார்த்திகேயனின் செயலால் குவியும் பாராட்டுக்கள்…. அப்படி என்ன பண்ணாரு?….!!!!

சிவகார்த்திகேயன் தான் பாடலெழுதியதுக்காக பெற்ற சம்பளத்தை மறைந்த நா.முத்துக்குமாரின் குழந்தைகள் படிப்பு செலவிற்காக கொடுத்துவிட்டாராம்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். இவர் தனது விடா முயற்சியோடு அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார். கனா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இடம்பெற்ற “எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி” பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் பாடல் எழுதும் வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கின்றது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்கு இவர் பாடல் எழுதியிருக்கிறார். எதற்கும் துணிந்தவன் படத்தில் இவர் எழுதிய பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் இவர் எழுதிய பாடலானது வரும் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகின்றது. இதை மறைந்த நடிகர் முத்துக்குமாரின் இரண்டு பிள்ளைகள் படிப்பு செலவிற்கு சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பாராட்டுவதோடு கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |