டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை காட்டி நண்பனை மிரட்டி 10 லட்சம் கேட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வாலிபர் ஒருவருக்கு கடிதம் மற்றும் பென்ட்ரைவ் அடங்கிய பூங்கொத்து ஒன்று நேற்று காலை கிடைத்துள்ளது. அந்த பென்டிரைவை திறந்து பார்த்தபோது அந்த வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் அவர் தனது காதலியுடன் தனிமையில் இருக்கும் பாலியல் காட்சிகள் அடங்கிய உல்லாச வீடியோ ஒன்று இருந்துள்ளது. மேலும் அந்த கடிதத்தில் ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் எனவும் அவ்வாறு தரவில்லை எனில் அந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்படும் என்றும், எழுதி இருந்தது .இதனைத்தொடர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணைக்கு பின்னர் 31 வயதுடைய சமீர் ஜோரி என்ற நபரை கைது செய்துள்ளனர். அந்த நபர் வாலிபரின் ஏழு ஆண்டுகால நண்பர் ஆவார். மேலும் போலீசார் ஜோரிடம் இருந்து வீடியோ பென்டிரைவ் மற்றும் கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாலிபர் தனது லேப்டாப்பை சரியாக ஆப் செய்யாமல் சென்ற தருணத்தை பயன்படுத்தி அவருடைய நண்பர் தகவல்களை திருடியதாக தெரிகிறது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஜோரி வீடியோவை பயன்படுத்தி நண்பனை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார், என்பதும் தெரியவந்துள்ளது.