தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமில்லாமல் தரமான படங்கள் மூலம் தனித்துவமான நடிப்பில் எந்த ஒரு கதாப்பாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பவர் விஜய் சேதுபதி. இருப்பினும் இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான பல படங்கள் தோல்வியில் முடிந்த நிலையில் கட்டாய வெற்றி நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் இவர் நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ரிலீஸான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். அனிருத் இசையில் முக்கோண காதல் கதையாக வெளியான இத்திரைப்படம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இப்படம் திரையரங்குகளில் வெளியான இரண்டு நாட்களிலேயே வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக “காத்துவாக்குல ரெண்டு காதல்” படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் சமீபத்தில் வெளியான ஒரு தகவலால் வருத்தத்தில் உள்ளனர்.
அதாவது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் கார்த்திக்கு பதில் நடிக்கவிருந்தாராம். ஆனால் விஜய் சேதுபதி அப்போது வேறு சில படங்களில் கமிட்டானதால் பொன்னியின் செல்வன் படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு வாய்ப்பை விஜய்சேதுபதி தவறவிட்டுட்டாரே என்று வருந்தி வருகின்றனர்.