Categories
தேசிய செய்திகள்

ச்ச… போலீசே இப்படி பண்ணலாமா…? விசாரணையில் தெரியவந்த உண்மை… சஸ்பெண்டான எஸ்ஐ…!!!

தற்கொலை செய்து கொண்ட நபரின் செல்போனை திருடிய எஸ்ஐ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனியபுரம் ரயில் நிலையம் அருகே உயிரிழந்து கிடந்தார். இவரது இறப்பு தற்கொலை என்று போலீசார் கண்டறிந்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மங்களூரு எஸ்ஐ ஜோதி சுதாகர் தலைமையில் விசாரணை முடிந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் செல்போனை எஸ்ஐ திருடியது தற்போது தெரியவந்துள்ளது.

இளைஞரின் உறவினர்கள் அவரின் செல்போனை காணவில்லை என்று சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது சம்பந்தமாக விசாரணை செய்து வந்தனர். தொடர்ந்து சைபர் செல் உட்பட்ட விசாரணையில் காணாமல் போன செல்போனை பயன்படுத்தி இருப்பது எஸ்ஐ தான் என்பதை கண்டுபிடித்தனர். எஸ்ஐ செல்போனில் புதிய சிம் கார்டை போட்டு பயன்படுத்தி வந்தது, விசாரணையில் தெரியவந்தது. செல்போன் திருடப்பட்டது உறுதி செய்த பிறகு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |