தஞ்சாவூரில் உள்ள கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.இராமநாதன் (வயது 82). இவர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். மேலும் இவர் 1983 முதல் 1997 வரை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் மற்றும் 2000 முதல் 2021 வரை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கரந்தை தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் மற்றும் இந்நாள் தலைவருமான கரந்தை தமிழ்ச் செம்மல் ச.இராமநாதன் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன் எனவும் ஈடுசெய்ய முடியாத அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு, என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.