நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்த டிராக்லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது . இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
#JagameThandhiram TrackList!!#JTAlbumOnJune7
A @Music_Santhosh Musical 🎶🎶@dhanushkraja @sash041075 @SonyMusicSouth @NetflixIndia @Lyricist_Vivek @TherukuralArivu @anthonydaasan #ofro #MeenakshiElayaraja #MaduraiBabaraj pic.twitter.com/slsiU23pWR
— karthik subbaraj (@karthiksubbaraj) June 5, 2021
ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் ஆடியோ வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் குறித்த டிராக்லிஸ்டை படக்குழு வெளியிட்டுள்ளது.