Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்… தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்…!!!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, அஸ்வந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Jagame Thanthiram teaser: Dhanush, Karthik Subbaraj promise a crackling,  dark comedy | Entertainment News,The Indian Express

ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் இடம்பெற்ற ‘நேத்து’ என்கிற பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் மொத்த பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருப்பதாகவும் இவை அடுத்தடுத்து ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது . இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |