இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவர் காயம் காரணமாக முழங்காலில் தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் ஜடேஜாவால் விளையாட முடியவில்லை. இது குறித்து ஐசிசி ரிவ்யூ நிகழ்ச்சியில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 5-வது இடத்தில் ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடக் கூடியவர். ஜடேஜாவும், பாண்டியாவும் சிறந்த ஆல்ரவுண்டர்கள். இவர்களால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தது.
ஜடேஜா காயம் காரணமாக விலகியதால் இடது கை ஆட்ட வீரர் வேண்டும் என்பதற்காக, தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப் பண்டை 4-வது அல்லது 5-வது வரிசையில் விளையாடுவதற்கு தேர்வு செய்தனர். உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியினர் 4-வது, 5-வது வரிசையில் யாரை விளையாட வைக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஜடேஜா டி20 போட்டியில் விளையாடாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. ஏனெனில் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல நிலையில் இருந்தார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.