நாளை (மார்ச்.26) ஐபிஎல் 15-ஆவது சீசன் தொடங்க உள்ளது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் லீக் போட்டியில் களம் காண உள்ளது. இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனிக்கு 40+ வயதாகிவிட்டது. மேலும் கடந்த 2 வருடங்களாக தோனி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை.
எனவே இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் கேப்டன் பதவியை தோனி தானாக முன்வந்து ஜடேஜாவிடம் ஒப்படைத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் நெருக்கடியான நேரத்தில் முடிவுகளை எடுப்பது, ஜடேஜாவுக்கு களத்தில் ஆலோசனைகளை வழங்குவது போன்ற பணிகளில் தோனி ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. ஜடேஜா லெவன் அணியை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபடுவார். இதில் தோனி தலையிட மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.