Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜடேஜாவுக்கு பதில் மாற்று வீரர் யார்…..? 4 பேர் போட்டி….. யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்…..!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியில் யாரை சேர்ப்பது என்று பிசிசிஐ தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களின் பட்டியலில் 4 பேர் இருக்கின்றனர். அதன்படி ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேலை தேர்வு செய்யலாம். ஆசிய கோப்பை தொடரில் கூட ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் தான் விளையாடினார். இவர் பந்து வீசுவது மற்றும் டெத் ஓவரில் வல்லவர். ஆனால் சமீப காலமாகவே அக்சர் படேலுக்கு இந்திய அணியில் நிலையான ஒரு இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து சிறப்பான ஆல் ரவுண்டராக திகழும் வாஷிங்டன் சுந்தர் சமீபத்தில் நடைபெற்ற கவுண்டி கிரிக்கெட் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டார்.

இவரை டி20 உலகக் கோப்பை போட்டியில் தேர்வு செய்தால் நிச்சயம் நல்ல தாக்கத்தை பார்க்கலாம். அதன் பிறகு குல்தீப் யாதவ் ஜடேஜாவை போன்று சிறப்பாக பேட்டிங் செய்பவர் கிடையாது என்றாலும், சகலுடன் இணைந்து பந்து வீசி பலமுறை வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். சகலும், குல்தீப் யாதவ்வும் இணைந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள். இவர் குறைந்தபட்சம் ரிசர்வ் வீரர்கள் பட்டியலிலாவது இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைத்தொடர்ந்து ஷாபஸ் அகமது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அதிரடியாக விளையாடுவார். இவரை ஜடேஜாவுக்கு பதில் தேர்வு செய்தால் கண்டிப்பாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

Categories

Tech |