2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 5 பேரை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2008 ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதால் அடுத்ததாக ரசிகர்கள் 2023 ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி உள்ளனர். ஐபிஎல் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தின் கடைசி கட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பெயர்கள் பட்டியலை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கான பணிகளில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாங்கள் விடுவிக்கும் பெயர்களை அறிவித்துள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா அணியிலிருந்து விலக உள்ளார் என செய்திகள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி உலா வந்த நிலையில், அவரை அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது கேப்டனாக நியமிக்கப்பட்ட ஜடேஜா தொடர் தோல்விக்கு பின் அப்பதவியிலிருந்து விலகினார். பின் தோனி கேப்டனாக மாற்றப்பட்டார். இதனால் சென்னை அணிக்கும், ஜடேஜாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அணி நிர்வாகம் அவரை தக்க வைத்திருப்பதாக தெரிகிறது.
மேலும் சிஎஸ்கே அணியில் இருந்து கிறிஸ் ஜோர்டான், ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர் ஆகியோரை விடுவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மும்பை அணி பொல்லார்டு, பேபியன் ஆலன், டைமல் மில்ஸ், ஹிரித்திக் செளகின், மயங்க் மார்க்கண்டே ஆகியோரை விடுவித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் 35 வயதான பொல்லார்டை மினி ஏலத்தில் எடுத்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர். பொதுவாக மும்பை – சென்னை அணி போட்டி என்றாலே இந்தியா – பாகிஸ்தான் போட்டி போல இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னை என்று வந்து விட்டாலே பொல்லார்ட் பொளந்து கட்டுவார். ஆனால் கடந்த சீசனில் அவர் சரியாக ஆடாததால் பலமுறை தனிஆளாக நின்று வென்று கொடுத்த அவரை மும்பை அணி கழட்டி விட்டுள்ளது. எனவே இந்த முறை பொல்லார்ட்டை சென்னை அணி ஏலத்தில் வாங்கினால் மும்பைக்கு எதிராக அவர் பொளந்து கட்டலாம் என ரசிகர்கள் நினைக்கின்றனர். எனவே அவரை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது..
2010 ஆம் ஆண்டு முதல் பொல்லார்ட் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நடந்து முடிந்த 2022 ஐபிஎல் தொடரில் பொல்லார்ட் 11 போட்டிகளில் 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அந்த சீசன் அவருக்கு சரியாக அமையவில்லை. தனது ஐபிஎல் கேரியரில் இவருக்கு இது மிகவும் குறைந்தபட்ச சராசரி 14.40) ஆகும். மேலும் பந்துவீச்சிலும் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணி கடந்த சீசனில் மிகவும் மோசமாக பத்தாவது இடத்தை பிடித்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
MI releasing Pollard was out of syllabus for me .
Get him CSK @ChennaiIPL
We did the bidding war before 10 years .
This time we are bringing him to the Den #IPLAuction #IPL2023Auction #IPLretention #ipl pic.twitter.com/O8TiOmSJUw
— Balaji Rajaram (@BALABRADMAN) November 12, 2022