Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜா போட்ட பதிவு…. ரெய்னாவின் கமெண்ட்….. “எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே”….. பாச மழையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

“மீண்டும் தொடங்கலாம்” என ஜடேஜா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள நிலையில், அதற்கு ரெய்னா, அணி நிர்வாகம் கமெண்ட் செய்துள்ளது சென்னை ரசிகர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் பக்கம் திரும்பியுள்ளனர். 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறுகிறது. எனவே இந்த மினி ஏலத்திற்கு முன்னதாக நேற்றுக்குள் (நவம்பர் 15ஆம் தேதி) ஐபிஎல் அணி உரிமையாளர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள், பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் அறிவுறுத்தியிருந்தது. எனவே நேற்று மாலையுடன் காலக்கெடு முடிந்த நிலையில், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை சமர்ப்பித்துள்ளது. அதில் ரவீந்திர ஜடேஜாவை தக்க வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏனென்றால் கடந்த சீசனில் ஜடேஜாவின் தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வியை சந்திக்க, அவர் பதவியிலிருந்து பாதியில் விலகினார். மேலும் காயத்தால் பாதி போட்டிகளில் ஜடேஜா ஆடவில்லை. இதையடுத்து தோனி கேப்டனாக செயல்பட்டார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே தொடர்பான புகைப்படங்களையும் நீக்கினார் ஜடேஜா. இதனால் சிஎஸ்கேவுக்கும், ஜடஜாவுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும், இதனால் வரும் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அவர் ஆடுவாரா? இல்லை வேறு அணிக்கு ஆடுவாரா என சமூக வலைதளங்களில் குழப்பமான கருத்துக்கள் பரவியது.

இந்நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜடஜாவைஅணி நிர்வாகம் தக்கவைத்துள்ளது. அதேபோல சென்னையின் கேப்டனாக எம் எஸ் தோனி தொடர்கிறார். அதேசமயம் சென்னை அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வந்த பிராவோவை விடுவித்துள்ளது சிஎஸ்கே.

இந்நிலையில் சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டிருக்கும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். தோனியை வணங்குவது போன்று இருக்கும் அந்த புகைப்படத்தை பகிர்ந்த ஜடேஜா, “எல்லாம் நன்றாக இருக்கிறது, மீண்டும் தொடங்கலாம்” என பதிவிட்டுள்ளார். ஜடேஜாவின் இந்த மகிழ்ச்சியான பதிவு சென்னை ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல  இன்ஸ்டாவிலும் ஜடேஜா பதிவிட்டிருந்தார்.

ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கமெண்ட் செய்துள்ளார். அதில் ‘சிஎஸ்கே என்பது வாழ்க்கையில் ஒரு குடும்பம்’ என பதிவிட்டுள்ளார். அதற்கு ஜடேஜா எஸ் பிரதர் என்று கமெண்டில் பதிலளித்தார். அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஜடேஜாவின் பதிவிற்கு எப்போதும் என்றென்றும் சிஎஸ்கே என எல்லோ ஹாட் இமோஜியை பதிவிட்டுள்ளது. இந்த பதிவால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

Categories

Tech |